ஆண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே, "அடுத்த ஆண்டு முதல் ராணுவ விமான பணியில் பெண் விமானிகள் இருப்பார்கள் என உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர், " கடந்த மாதம், பெண் அலுவலர்களை ராணுவ விமானப் போக்குவரத்து பணியில் நியமிக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். பெண்களுக்கு விமான பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு அடுத்தாண்டு முதல் விமான பணியில் நியமிக்கப்படுவார்கள்.
இதுவரை விமான துறையில் பெண்கள் அலுவலக ரீதியான பணிகளிலே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இனிமேல், பெண்கள் ஹெலிகாப்டர்களில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்" என்றார்.
இந்திய விமானப்படையில் 10 பெண் போர் விமானிகள் உள்ளனர். இந்திய கடற்படையில், டோர்னியர் விமானம், ஹெலிகாப்டர்கள் மற்றும் பி8ஐ கண்காணிப்பு விமானங்களை பெண் விமானிகள் இயக்கி வருகின்றனர். இந்த 10 போர் விமானிகளைத் தவிர, போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக மொத்தமாக 111 பெண் விமானிகளை ஐ.ஏ.எஃப் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.