ETV Bharat / bharat

மாந்திரீகம் செய்ததாக பெண் கொலை: ஆயுள் தண்டனை கைதிகள் மேல்முறையீட்டில் ட்விஸ்ட்!

மேற்கு வங்க மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மாந்திரீகம் செய்ததாக பெண் ஒருவர் கொலை செய்யபட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதில், 15 ஆண்டுகளாக தண்டனையில் உள்ள இருவர் ஆயுள் தண்டனைக்கு எதிராக தொரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 4:59 PM IST

டெல்லி: மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் 1993ஆம் ஆண்டு மாந்திரீகம் செய்ததாகக் கூறி கேசரி மஹதோ என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரில் இருவர் மட்டும் ஆயுள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். ஆகையால், தங்களது ஆயுள் தண்டனைக்கு எதிராக இருவரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், தங்களிடம் கொலை செய்வதற்கான எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் அந்தப் பெண்ணின் மாந்திரீகப் பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க, அந்தப் பெண்ணுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தபோது எதிர்பாராத விதமாக கொலை நடத்தது என கூறப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

மேலும், அப்பெண்ணின் தலையில் ஏற்பட்ட காயங்களின் தன்மையைக் காணும்போது, இந்த கொலை எதார்த்தமாகவோ அல்ல அச்சுறுத்தல் செய்வதற்காகவோ நடந்ததுபோல தெரியவில்லை. இதன் மூலம், கொடிய ஆயுதங்களால் அப்பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கொலை செய்திருப்பது தெரியவருகிறது என நீதிபதிகள் கூறினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐந்து பேரில் பாந்து கோரைன் மற்றும் ராஜேன் கோரைன் ஆகிய இருவரிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. அவர்கள், அப்பெண்ணைத் தாக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அந்த கொலை குழுவில் ஒரு அங்கமாக இருந்தனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், குற்றம்சாட்டப்பட்டவர்களை ஐந்து பேரையும் நேரில் பார்த்ததாகவும், அவர்கள் வாக்குவாதம் செய்ததை பார்த்ததாகவும் கூறியுள்ளனர்.

ஆகையால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆயுள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு மனு சமர்ப்பிக்க எந்தத் தகுதியும் இல்லை. மேல்முறையீடு செய்தவர்களும் மற்ற மூன்று குற்றவாளிகளும் கொடிய ஆயுதங்களுடன் பெண்ணை கொடூரமாக கொலை செய்தது உறுதியாகியுள்ளது. இது திட்டமிட்டக் கொலை என்பதும் தெரியவந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

இருப்பினும், இரண்டு குற்றவாளிகளும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததால், மாநில அரசின் நடைமுறைக் கொள்கையின்படி விடுதலை பெற உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மற்ற மூன்று குற்றவாளிகளான சுரேந்திர கோரைன், ரஞ்சித் கோரை மற்றும் ராஜேன் கோரைன் ஆகியோரது மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நண்பனை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சக நண்பர்கள் கைது : நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.