அலிகர்க் : உத்தர பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிக்காக பெண் ஒருவர் வந்து உள்ளார். பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிக்காக வந்த பெண்ணிடம், மனோஜ் சர்மா என்ற உதவி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்திக் கொண்டு இருந்து உள்ளார்.
இதனிடையே, உதவி ஆய்வாளர் மனோஜ் மிஸ்ரா தனது கைத் துப்பாக்கியை வெளியே எடுத்த நிலையில், எதிர்பாராதவிதமாக அதில் இருந்த குண்டு வெடித்து எதிரில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிக்காக வந்த பெண்ணின் தலையில் பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் அதே இடத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் குண்டு காயம் பட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் மனோஜ் சர்மா தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை பணியிடை நீக்கம் செய்து உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், தலைமறைவான மனோஜ் சர்மாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பீகார் ஆசிரியர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?