ETV Bharat / bharat

கணவர் இறந்து 52 ஆண்டுகள் கழித்து, அவரின் ஓய்வூதியப்பலன்களைப் பெற்ற மனைவி

author img

By

Published : Sep 23, 2022, 10:28 PM IST

ஒடிசாவைச்சேர்ந்த 89 வயது மூதாட்டி ஒருவருக்கு, அவரது கணவன் இறந்த 52 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது கணவரின் ஓய்வூதியப் பலன் கிடைத்துள்ளது.

Etv Bharatகணவர் இறந்து ஐம்பது வருடங்கள் கழித்து முதியோர் உதவித் தொகை பெற்ற மூதாட்டி

ஒடிசா: ஒடிசாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது கணவர் இறந்து 52 ஆண்டுகள் கழித்து அவரது கணவரின் ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுள்ளார். தற்போது அந்த மூதாட்டி 89 வயதில் தற்காலிக ஓய்வூதியமாக ரூ.16 லட்சம் பெற்றார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஆராத் பஜாரைச்சேர்ந்த லலிதா மொகந்தி என்ற மூதாட்டியின் கணவர் பீம்சென் மொகந்தி 52 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது கணவர் இறந்தபோது அவருக்கு வயது 37ஆகும். அவரது கணவர் ஒடிசா மாநிலப்போக்குவரத்துக்கழகத்தில் (OSRTC) பணிபுரிந்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, ஓஎஸ்ஆர்டிசியில் இருந்து லலிதாவுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின்னர் லலிதாவுக்கு நீதி கிடைத்துள்ளது. லலிதாவின் கணவரின் குடும்ப ஓய்வூதியம் 52 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றம் லலிதாவிற்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது.

இருப்பினும் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஒன்பது ஆண்டுகள் ஆனது. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, லலிதாவுக்கு தற்காலிக ஓய்வூதியமாக 16 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்... பள்ளி மாணவனின் தற்கொலை கடிதம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.