ETV Bharat / bharat

சாதாரண வாக்குவாதத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்! - மனைவியின் முகத்தை தரையில் பலமுறை மோதி கொலை

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதத்தின்போது, ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman dies
Woman dies
author img

By

Published : Apr 23, 2022, 5:11 PM IST

டெல்லி: ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த ஜன்ம் ஜெய் சிங் (35), அங்குள்ள கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி டெல்லி புத்பூரில் (Budhpur) உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியுள்ள மகளை அழைத்து வருவதற்காக, ஜெய் சிங்கும் அவரது மனைவி குடியா தேவியும்(32) சென்றுள்ளனர்.

மகளை அழைத்துக் கொண்டு அன்றே அம்பாலாவுக்கு செல்லலாம் என ஜெய் சிங் கூறியுள்ளார். ஆனால் புத்பூரில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் திரும்பிச் செல்லலாம் என அவரது மனைவி வற்புறுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ஜெய்சிங் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். மனைவியின் முகத்தை தரையில் பலமுறை மோதியதில் குடியா தேவி படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியா தேவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கணவர் ஜெய் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: முன்னாள காதலியுடன் தகராறு - 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.