மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பாஸ்கல்வாடி பகுதியைச்சேர்ந்த பெண்மணி(27) ஒருவர் எலியை கொல்வதற்காக தக்காளியில் விஷம் வைத்துள்ளார். பிறகு அவர் டிவி பார்த்துக்கொண்டே சமையல் செய்துள்ளார்.
டிவியில் மூழ்கிய அந்த பெண்மணி, விஷம் கலந்த தக்காளியை சேர்த்து நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுள்ளார். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவனையில் சிகிச்சைப்பெற்று வந்த அந்த பெண்மணி, இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலிகள், கரப்பான் உள்ளிட்டவற்றை கொல்ல உணவுப் பொருட்களில் விஷம் வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.