ETV Bharat / bharat

இளைஞரின் பிறப்புறுப்பை துண்டித்த பெண்.. உ.பி., பயங்கர சம்பவத்தின் பின்னணி என்ன? - UP news in tamil

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண், தனது ஆண் நண்பரின் பிறப்புறுப்பை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்தை மீறிய உறவால் இளைஞரின் பிறப்புறுப்பை துண்டித்த பெண் - உ.பியில் பயங்கரம்

author img

By

Published : Jun 28, 2023, 7:20 AM IST

புலான்ஷார்: உத்தரப்பிரதேச மாநிலம் புலான்ஷார் மாவட்டத்தின் ஜஹாங்கிராபாத் பகுதியில் ஒரு உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இவர்களது மண வாழ்க்கையும் சுமூகமாக சென்று கொண்டிருந்துள்ளது.

இந்த நிலையில், தனது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஒரு இளைஞர் உடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனால், கணவருக்குத் தெரியாமல் அந்த இளைஞர் உடன் பேசுவதையும், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த இளைஞர் உடன் தனிமையில் இருப்பதையும் அப்பெண் வழக்கமாக வைத்திருந்து உள்ளார்.

இதனிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் வேறு ஒரு இடத்தில் வசித்து வந்து உள்ளனர். ஆனால், இவ்வாறு வசிக்கத் தொடங்கிய ஒரு வார காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்து உள்ளது. எனவே, இருவரும் தனியாக பிரிந்து சென்று உள்ளனர். இதில் அப்பெண் மீண்டும் தனது கணவரைத் தேடி வந்து உள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அப்பெண்ணின் கணவர், பின்னர் பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பிறகு வீட்டில் அனுமதித்து உள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 26) இரவு தனது ஆண் நண்பருக்கு மீண்டும் தொலைபேசியில் அழைத்து உள்ளார். அப்போது, தான் தங்கி இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிக்கு பின்புறம் வருமாறு அந்த இளைஞரை அப்பெண் அழைத்து உள்ளார். இந்த அழைப்பின் பேரில் அங்கு வந்த இளைஞரிடம் பெண் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இது வாக்குவாதமாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் இளைஞரின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் ரத்தம் வழிந்த நிலையில் இளைஞர் வலியால் துடித்து அலறி உள்ளார். இதனிடையே, அப்பெண் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர், இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் சுகாதார மையத்தில் அனுமதித்துள்ளனர்.

பின்னர், அவர் அங்கு இருந்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், இளைஞரின் உறவினர் அளித்த புகாரின் பேரில் ஜஹாங்கிராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பை தாக்கினால் கொலை முயற்சியா? கர்நாடக உயர் நீதிமன்றம் திடுக் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.