அயோத்தி(உத்தர பிரதேசம்): உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராம் ஜென்ம பூமியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 பெண் காவலர்கள், "பட்லி கமாரியா" என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர்.
காவலர் உடையில்; ரீல்ஸ் செய்து வெளியிட்டால் மாட்டிக் கொள்வோம் என கருதிய பெண் காவலர்கள் சாதாரண உடையில் வீடியோ வெளியிட்டு உள்ளனர். வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயங்கர வைரலானது.
பெண் காவலர்களின் வீடியோ காவல் கண்காணிப்பாளர் பார்வைக்கு சென்ற நிலையில், பணியின் போது வீடியோ வெளியிட்டதாக 4 பெண் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 100-வது நாளை தொட்ட இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு