ETV Bharat / bharat

ஓவர் டார்ச்சர்! செல்போன் செயலியில் கடன் பெற்ற இளம்பெண் உயிரிழப்பு - ஓவர் டார்ச்சர்

ஹைதராபாத்: செல்போன் செயலியில் (App) பெற்றக் கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் திணறிய இளம்பெண்ணுக்கு அச்செயலி தரப்பில் கொடுத்த மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற அந்த பெண் உயிரிழந்தார்.

இளம்பெண்
இளம்பெண்
author img

By

Published : Dec 17, 2020, 9:07 PM IST

Updated : Dec 17, 2020, 9:28 PM IST

தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், செல்போன் செயலியில் கடன் பெற்று, குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண் அக்கவுண்ட் க்ளஸ்டர் என்ற நிறுவனத்தில் ஏஈஓ(AEO) ஆக பணிபுரிந்தார். கரோனா காலத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட பணத் தேவையின் நிமித்தம் ’ஸ்னாபிட் லோன்’ (Snapit Loan) என்ற செயலி மூலம் ஆன்லைனில் ஆவணங்களைச் சமர்ப்பித்து எளிதில் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார்.

அவருடைய தந்தையின் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், அந்தக் கடனை குறுகிய காலத்தில் அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனிடையே, ஸ்னாபிட் லோன் செயலி மேலாளர்கள் அந்தப் பெண்ணிற்கு செல்போன் அழைப்புகளில் அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும், குறுகிய காலத்தில் 3 லட்சம் ரூபாய்யை திருப்பிச் செலுத்தச் சொல்வது அவருக்கு சிரமத்தையே ஏற்படுத்தியது.

பணத்தைத் திருப்பிச் செலுத்த தாமதமாகவே அந்தப் பெண்ணிற்கு அச்செயலி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் விவகாரம் குறித்து செயலி தரப்பிலிருந்து அந்தப் பெண்ணின் நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பப்பட்டது. இதனால், மன அழுத்ததிற்குள்ளான அந்தப் பெண் கடந்த 14ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்று நேற்று (டிச.17) அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சித்திபேட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் பாதுகாப்பற்றவை. இது போன்ற செயலிகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க: ஆன்லைனில் கடன் வாங்கித் தரும் மோசடி கும்பல்!

Last Updated : Dec 17, 2020, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.