உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கயா ஸ்ரீ என்ற பெண், சிவபெருமானின் தீவிர பக்தையாவர். இந்நிலையில், கயா ஸ்ரீ தனக்கு குழிதோண்டி தருமாறு குடும்பத்தாரிடம் கேட்டு, தோண்டப்பட்ட நான்கு அடி குழியை தினமும் பூஜை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன் கனவில் வந்த சிவ பெருமானுடன் தான் முறையிட்டதால் கோபமடைந்துள்ளார் என்றும் அதனால் சிவபெருமானை சமாதானப்படுத்தவும், சந்திக்கவும் தன்னை குழிக்குள் புதைக்க வேண்டும் எனவும் குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார் கயா ஸ்ரீ. இதனையடுத்து குடும்பத்தாரும் கயா ஸ்ரீயை ஒரு கட்டில் மேல் வைத்து குழியை மூடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் கயா ஸ்ரீயை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒரு உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என இந்திய சட்டமே நமக்கு விளக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் பக்தி என்ற மமதையில் இதுபோன்று மூட நம்பிக்கைகளை பின்பற்றுவது நல்லது அல்ல என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...கெட்டிக்காரன் பொய் 8 நாள்தான் நிற்கும் - பட்ஜெட் குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்