டெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்த ராகுல் காந்தி, "உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூருக்கு அங்குள்ள நிலவரத்தை அறிந்துகொள்வதற்காகவும், உழவரின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் இரண்டு முதலமைச்சர்களுடன் நான் இன்று லக்கிம்பூர் செல்ல உள்ளேன்.
பிரியங்கா சித்தாபூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், இது உழவருடன் தொடர்புடைய விடயம். உழவர் ஜீப் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர், அவரது மகனின் பெயர் அடிபடுகிறது.
உழவர் கொல்லப்படுகின்றனர், இந்தியாவில் இப்போது 'சர்வாதிகாரம்' இருக்கிறது. நேற்றுவரை நாங்கள் உத்தரப் பிரதேசம் செல்ல முடியாது என்று சொல்லப்பட்டுவந்தது.
- பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 5) லக்னோ சென்றார். ஆனால் லக்கிம்பூர் செல்லவில்லை.
உழவர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் (ஞாயிற்றுக்கிழமையன்று) திட்டமிட்டது. இந்த விவகாரத்தை எழுப்புவது உங்களது (ஊடகம்) பொறுப்பு. ஆனால் நாங்கள் இந்த விவகாரத்தை எழுப்பினால் அரசியல் செய்வதாகக் கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆபத்பாந்தவன்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்த வெகுமதி!