ETV Bharat / bharat

ஷார்ட்ஸ் வீடியோவால் விபரீதம் ... காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்... - கொலை செய்த கணவன்

பிகார் மாநிலத்தில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் வீடியோ பதிவேற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

ரீல்ஸ் செய்ததற்காக மனைவியைக் கொலை செய்த கணவன்...!

author img

By

Published : Sep 27, 2022, 7:49 PM IST

பிகார்: பாட்னா: பிகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகதீஷ்பூரை சேர்ந்த தம்பதி அன்னு கடூன்-அனில் சவுத்ரி இருவருக்கும் இடையே சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவேற்றுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கணவர் அனில் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து ஜகதீஷ்பூர் போலீசார் தரப்பில், இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை (செப்.25) நடந்துள்ளது. அன்னு கடூன் சமூகவலைதளங்களில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் வீடியோக்களை பதிவேற்றுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். இது பிடிக்காத அனில் அந்த செயலிகளை செல்போனில் இருந்து நீக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அன்னு தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றிவந்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவதம் முற்றியே அனில் அன்னுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதற்கு டவலை பயன்படுத்தியுள்ளார். அதன்பின் இரவு முழுவதும் அன்னுவின் உடலருகிலேயே இருந்துள்ளார். அதன்பின் எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.