ETV Bharat / bharat

கணவர் EMIல் செல்போன் வாங்கியதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை!! - தகராறு

மல்கனகிரி மாவட்டம், கலிமேலாவில் ஸ்மார்ட் போன் EMI தொடர்பாகக் கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் EMIல் செல்போன் வாங்கியதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை

author img

By

Published : Oct 19, 2022, 10:24 PM IST

ஒடிசா: மல்கனகிரி மாவட்டம், கலிமேலா கிராமத்தைச் சேர்ந்த கனாய், ஜோதியை ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகு, கனாய் மனைவி ஜோதிக்கு மாதாந்திர நிதி (EMI) அடிப்படையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினார். ஆனால், பணம் குறித்து ஜோதியிடம் அவர் தெரிவிக்கவில்லை. அனைத்து தவணைகளையும் செலுத்தியதைத் தொடர்ந்து, நிதி நிறுவன ஊழியர் ஒருவர் ஆவணத்தில் கையொப்பமிட அவரது வீட்டிற்குச் சென்றார்.

அப்போது ஜோதியின் கணவர் வீட்டில் இல்லாததால், ஜோதிக்கு EMIஇல் மொபைல் போன் வாங்கியது தெரியவந்தது. பின்னர் கணவர் வீடு திரும்பியதும் ஜோதி அவரிடம் தகராறு செய்து விஷம் குடித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கனாய் நிலையும் மோசமடைந்தது. அவர்கள் இருவரும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஜோதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

"எனது மனைவி என்னிடம் விலையுயர்ந்த போன் வாங்கச் சொன்னாள். ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் அவளிடம் சொல்லாமல் ஃபைனான்ஸில் போனை வாங்கினேன். ஆனால் அது அவளுக்குத் தெரிந்த பிறகு எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவள் தற்கொலை செய்தார்", என்றார் கனாய்.

இதையும் படிங்க: மாட்டிறைச்சி வகைப்பாட்டை விளக்குக..! பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.