பரிபூர்(மேற்கு வங்கம்): பருய்பூரில் உள்ள கடற்படை வீரர் உஜ்ஜல் சக்ரவர்த்தி (54), சில தினங்களுக்கு முன் காணாமல் போனது தொடர்பான விசாரணையில், அவரது உடல் பாகங்கள் பல இடங்களில் கிடைத்தது. இதனையடுத்து உஜ்ஜல் சக்ரவர்த்தியின் மனைவி மற்றும் மகனை காவல் துறையினர் விசாரித்ததில் அவர்கள் இருவரும் இணைந்து உஜ்ஜல் சக்கரவர்த்தியைக்கொன்றது தெரியவந்துள்ளது. மேலும் அவரை 6 துண்டுகளாக வெவ்வேறு குளங்களில் வீசியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
முன்னதாக சென்ற நவ-15ஆம் தேதி உஜ்ஜல், அவரது மனைவி மற்றும் மகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மகன், அவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தை நெரித்துக்கொன்றதாக இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மது குடித்து விட்டு மனைவி மற்றும் மகனை உஜ்ஜல் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழன் (நவ-17) இரவு பருய்பூர்-மல்லிக்பூர் சாலையில் உள்ள திஹி பகுதியில் உள்ள குளத்தில் இருந்து உஜ்வல் சக்ரவர்த்தியின் பாதி உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மீதமுள்ள உடல் பாகங்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
டெல்லியில் ஷ்ரத்தா கபூரைக் கொன்று 35 துண்டுகளாக்கிய அஃப்தாப்பின் செயல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஜம்முவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை