காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக மத்திய அரசை விமர்சித்துவருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேளாண் சட்டம், சீனா ஆக்கிரமிப்பு, கோவிட்-19 பரவல் ஆகிய விவகாரங்களில் மோசமாக செயல்படுகிறது என்கு விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மேற்கண்ட மூன்று விவகாரங்கள் குறித்தும் ராகுல் காந்திக்கு கேள்விகளை முன்வைத்து பதிலளிக்க தயாரா என சாவல் விட்டிருந்தார்.
நட்டாவின் கேள்விகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல், "ஜே.பி. நட்டா என்ன என்னுடைய ஆசிரியரா? அவர் கேள்விக்கு நான் பதில் கூற. நாட்டிற்கே நான் தான் ஆசிரியர் என நட்டா நினைத்துக்கொண்டிருக்கிறாரா. நான் நாட்டு மக்களுக்கு மட்டுமே பதில் கூற கடமைபட்டுள்ளேன். விவசாயிகள் என்னிடம் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அவர்களிடம் நான் எனது பதிலை கூறுவேன்"என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: நண்பன் பட பாணியில் பிரசவம்