கோவிட்-19 பெருந்தொற்றை இந்தியா எதிர்கொண்ட விதத்தை உலக சுகாதாரா அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், " இந்தியா தனது உறுதியான நடவடிக்கைகள் மூலமாக கோவிட்-19 பாதிப்புக்கு முடிவுக்கட்டும் பாதையில் பயணிக்கிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால், பாதுகாப்பான தடுப்பூசிகளை தயாரித்து அனைவரையும் பாதுகாக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
உலகின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளராக உள்ள இந்தியா, ஆஸ்ட்ரா செனகா, நோவவாக்ஸ், கமேலியா உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களின் தடுப்பூசியை தயாரிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியாவில், அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக, முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: கட்டுக்குள் வரும் கோவிட்-19: ஆறு மாதங்களில் குறைவான பாதிப்பு!