ETV Bharat / bharat

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த அமைப்பு - மங்களூருவில் நடந்தது என்ன?

author img

By

Published : Jun 18, 2023, 7:18 AM IST

மனநலம் பாதிக்கப்பட்டு மங்களூருவில் சுற்றித் திரிந்த இளைஞரை 'ஒயிட் டவ்ஸ்' மனநல செவிலியர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் உரிய சிகிச்சை அளித்து மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த அமைப்பு! மங்களூரில் நடந்தது என்ன?

மங்களூர்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி திரிகோடினத்தைச் சேர்ந்தவர், மேகராஜ் (வயது 27). இவர் கடந்த நவம்பர் 2022-ல் கேரளாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அதனைத்தொடர்ந்து, மேகராஜை தேடிய அவரது குடும்பத்தினர், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கோட்டயத்தில் உள்ள திரிகோடினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மேகராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்து காணாமல் போன மேகராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவராக மங்களூருவில் சுற்றித் திரிந்துள்ளார். மங்களூரு பாடில் காட்டுப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சுற்றித் திரிந்த அவரை, 'ஒயிட் டவ்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கொரினா ரஸ்கினா என்பவரின் தலைமையிலான குழு, அழைத்து வந்துள்ளனர். அப்போது மன நலம் பாதிக்கப்பட்ட அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை.

மேலும், அழைத்து வரும் வழியிலேயே வாகனத்தின் கண்ணாடி வழியாக குதித்து தப்பிக்கவும் முயன்றுள்ளார். அவரைத் தடுத்து ஒயிட் டவ்ஸ் அமைப்பின் கட்டடத்திற்கு அழைத்து வந்த பின், கட்டடத்தின் மேலிருந்து குழாய் வழியாக கீழே இறங்கி தப்பித்துள்ளார். அதன்பிறகு, அவர் குந்திகானாவில் உள்ள ஏ.ஜே.மருத்துவமனை அருகே கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பலமுறை தப்பிக்க முயன்ற அவரை தேடிக்கண்டு பிடித்த ஒயிட் டவ்ஸ் அமைப்பு, அவருக்கு முறையான சிகிச்சை வழங்கியது. அமைப்பு வழங்கிய சிகிச்சையால் பூரண குணமடைந்த மேகராஜ் தனது ஊரின் பெயரைக் கூறியுள்ளார். அதன் பின், ஒயிட் டவ்ஸ் ஊழியர்கள் திருக்கோடினம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பின் திரிகோடினம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்சாரி, காவலர்கள் செல்வராஜ், மேகராஜின் சகோதரர் தாராநாத், சகோதரரின் நண்பர் ஷியாம் ஜித், உறவினர் கண்ணன் ஆகியோர் சனிக்கிழமை ஒயிட் டவ்ஸ்க்கு வந்து மேகராஜை அழைத்துச் சென்றனர். மேகராஜ் தனது குடும்பத்தினருக்காக காத்திருந்த நிலையில் அவர் சகோதரர் வந்ததால் மகிழ்ச்சி அடைந்தார். மேலும், வீடியோ அழைப்பின் மூலம் அவரது அம்மா மற்றும் அண்ணியிடமும் பேசியுள்ளார்.

இதுகுறித்து ஒயிட் டவ்ஸின் நிறுவனர் கொரினா ரஸ்கினா கூறுகையில், “நவம்பர் 2022-ல் பாடிலின் காட்டில் மேகராஜை கண்டுபிடித்தோம். மனநலம் பாதிக்கப்பட்ட அவர் பலமுறை தப்பிக்க முயன்றார். இருப்பினும் அவரை குணப்படுத்தி, மீண்டும் அவரை குடும்பத்துடன் இணைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்கள் அமைப்பால் குணப்படுத்தப்பட்டு 412ஆவது வழக்கு” என்று அவர் கூறினார்.

திருக்கோடினம் காவல் நிலைய எஸ்.ஐ அன்சாரி கூறிகையில், “மேகராஜ் காணாமல் போனது குறித்து எங்கள் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தோம். அவரை அடையாளம் காண முடியவில்லை. அவர் இப்போது மங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்துடன் இணைந்துள்ளார்” எனக் கூறினார்.

இதுகுறித்து மேகராஜின் சகோதரர் தாராநாத் கூறுகையில், “மேகராஜுக்கு சிறுவயதிலேயே ஃபிக்ஸ் நோய் இருந்தது. வெல்டிங் வேலை செய்து வந்த அவன் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது எதையோ கண்டு பயந்தான். அதன் பிறகு தான் மனமுடைந்து காணாமல் போனான். இப்போது அவரைக் கண்டுபிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: Hijavu Scam: ஹிஜாவு மோசடியில் தம்பதி கைது: ரூ.500 கோடி சுருட்டியது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.