சென்னை: பொதுவாக மூங்கில் என்றாலே புல்லாங்குழல், ஆடைகள், உணவு, எரிபொருள், கட்டுமானம் மற்றும் வீட்டு அலங்கார பொருள்கள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படும். ஆனால், இது அழகு பராமரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அழகிற்கு பயன்படும் மூங்கில்; மூங்கிலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல்வேறு வகையான சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் எனவும் கொரியர்களின் அழகு சாதான பொருட்களில் மூங்கில் முக்கிய பங்காற்றுகிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஃபேஸ் வாஷ், மாயிஸ்ட்ரைசர் உள்ளிட்ட பல்வேறு வகையான அழகு மற்றும் அழகு பராமரிப்பு பொருட்கள் இந்த மூங்கிலில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
எவ்வாறு மூங்கில் அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது?
- சரும பராமரிப்பில் மூங்கிலின் பங்களிப்பு : மூங்கிலில் உள்ள சிலிக்கா மற்றும் கொலாஜன் போன்ற மூலக்கூறுகள் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்கும். இதனால், சருமம் பொலிவு பெறுவதுடன், உடலில் இரத்த ஓட்டம் மேம்படுவதால் தோல் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மூங்கில் சாற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் சருமத்தைப் பாதுகாக்க மிக முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.
- முகப்பருவைப் போக்கும் மூங்கில்: முகப்பருவால் பாதிக்கப்பட்டுள்ள சருமத்திற்கு, மூங்கில் சாற்றில் செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், இவை சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுப் பொருள்களை அகற்றி சருமம் பொலிவாக இருக்க வழிவகுக்கிறது.
- முடி வளர்ச்சியில் மூங்கிலின் பங்களிப்பு: மூங்கிலில் உள்ள சிலிக்கா சரும அழகிற்கு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சி மற்றும் மென்மைக்கும் உதவுகிறது. பொதுவாக பெண்கள் முடி நீளமாக இருக்க வேண்டும் என்று விருப்புவார்கள். ஆனால், சரியான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து இல்லாததால் முடி உதிர்வு ஏற்படுகிறது. எனவே, முடி உதிர்வை தடுக்க மூங்கில் சாற்றில் செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூங்கிலில் உள்ள நோய் எதிர்ப்பு பண்புகள்: மூங்கிலில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அலர்ஜி, சொறி, போன்ற தோல் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனால்தான் நிபுணர்கள் சருமத்திற்கு மூங்கில் சாற்றில் செய்யப்பட்ட க்ளென்சர்கள் மற்றும் பாடி வாஷ்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.
மூங்கிலால் செய்யப்பட்ட அழகு பொருள்கள்: தோல் பராமரிப்பு, முடி, அழகு சாதனப் பொருள்களில் முக்கிய பொருளாக பயன்படுகின்ற மூங்கில் தற்போது சீரம், ஷீட் மாஸ்க்குகள், ஃபேஸ் மாஸ்க்குகள், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் க்ளென்சர்கள் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது. மேலும், நிபுணர்களின் ஆலோசனையின்படி அதிக அளவு மூங்கில் சாறு கொண்ட அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தலாம். கூந்தலைப் பொறுத்தவரை, மூங்கில் சாற்றில் செய்யப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: How To Reduce Waist Size in Tamil: தொப்பையைக் குறைக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்கள்..கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.!