ETV Bharat / bharat

நிழல் இல்லாத நாள் - சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிசயப் பகுதி!

உலகில் வடக்கு அரைக்கோளத்தில் கடக ரேகைப் பகுதியில் அமைந்துள்ள இடத்தில் நிழல் விழாமல் இருக்கும் அற்புத நிகழ்வு நடந்துள்ளது. இப்பகுதி சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது.

நிழல் இல்லாத சிறப்புநாள்- சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிசய பகுதி

author img

By

Published : Jun 22, 2022, 4:39 PM IST

'நிழல் இல்லாத நாள்' என்பது வடக்கு அரைக்கோளத்தில் பொருளின்அடியில் விழும் அதிசய நாளாகும். இது ஆண்டிற்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த நிகழ்வு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நடக்கும். இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா என்ற பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, சூரியன் கடக ரேகைக்கு செங்குத்தாக இருக்கும்.

இதன் காரணமாக நிழல் பொருள்களின் அடியில் விழும். இந்த நிகழ்வு 'நிழல் இல்லாத நாள்' அல்லது 'ஜீரோ ஷேடோ டே (ZSD)' என அழைக்கப்படுகிறது.

இதனையடுத்து சத்தீஸ்கர் தவிர, ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகிய ஏழு மாநிலங்கள் வழியாகப் இந்த ரேகை செல்கிறது.

கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையில் பூமியில் உள்ள ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ’நிழல் இல்லாத நாட்கள்’ நிகழ்கின்றன.

மகர ரேகையானது இந்திய நிலப்பரப்பிற்குக் கீழே செல்கிறது. அதே சமயம் இந்த ரேகை மத்திய இந்தியா வழியாக ஒடிசாவிற்கு சற்று மேலே செல்கிறது. இது போன்ற மேலே செல்லும் இடங்களில் இந்த நாள் நிகழ்வதில்லை. சத்தீஸ்கர் மாநிலமானது சரியாக பூமியின் சுழற்சி அச்சு 23.5° கோணத்தில் சாய்ந்திருக்கும் இடத்தில் இருப்பதால் இது நிகழ்கிறது.

சூரியனைச் சுற்றியுள்ள அச்சு மற்றும் சூரியனின் இருப்பிடம் பூமியின் பூமத்திய ரேகையின் 23.5° N-இலிருந்து 23.5° S வரை நகர்கிறது. சூரியனின் இருப்பிடத்திற்கும் பூமத்திய ரேகைக்கும் இடையே உள்ள கோணத்திற்கு சமமான அட்சரேகை உள்ள அனைத்து இடங்களிலும் இந்த நாள்களைப் பார்க்க முடியும்.

" பூமத்திய ரேகையில் சூரியன் மனித தலைக்கு சற்று மேலே வரும் இடங்களில் மட்டும் எந்த நிழல் நாளையும் காண முடியாது. இந்த ஆண்டு சர்குஜாவில் ஜூன் 21 மதியம் 12 மணி முதல் 12:40 மணி வரை இந்த நிகழ்வு நிகழ்ந்தது," இது குறித்து பல தகவல்களை ஆராய்ச்சியாளர் அக்ஷய் மோகன் பட் கூறினார்.

மேலும் இந்தியா அல்லாத பிற நாடுகளிலும் இந்த நாள் வரும். மெக்சிகோ, அல்ஜீரியா, மாலி, எகிப்து, நைஜீரியா, மொரிட்டானியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, பஹாமாஸ், தைவான், சாட், பங்களாதேஷ், சவூதி அரேபியா, லிபியா மற்றும் இந்தியா போன்ற உலகின் 18 நாடுகளில் நிழல் இல்லாத நாள் நிகழும்.

நிழல் இல்லாத சிறப்புநாள்- சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிசயப் பகுதி

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 155 பேர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.