ETV Bharat / bharat

நாகாலாந்து அப்பாவிகள் கொலை: என்ன செய்கிறது ஒன்றிய உள்துறை - ராகுல் காந்தி சாடல் - rahul gandhi tweet

நாகாலாந்தில் ராணுவத்தினர் பயங்கரவாதிகள் என நினைத்து தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, "இது மனதை உலுக்கும் செய்தி. இந்திய அரசு 13 உயிர்களுக்கும் பதிலளிக்கவேண்டும். சொந்த மக்களுக்கு சொந்த நிலத்தில் பாதுகாப்பு படையினராலேயே பாதுகாப்பில்லை," என்று கடுமையாக சாடியுள்ளார். இதற்கிடையே நாகாலாந்தில் கைப்பேசி, இணையதளம், குறுந்தகவல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Rahul Gandhi slams Centre over Nagaland incident, Nagaland firing incident, Nagaland firing incident Rahul Gandhi, What exactly is home ministry doing, killing of civilians in Nagaland, Rahul Gandhi tweet Nagaland incident, நாகலாந்து அப்பாவிகள் கொலை, ராகுல் காந்தி, நாகாலாந்து துப்பாக்குச்சூடு, ராகுல் காந்தி ட்வீட், ராகுல் காந்தி நாகாலாந்து, நாகா மக்கள் கொலை, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு, ராணுவ படை துப்பாக்கிச்சூடு, rahul gandhi on nagaland firing, rahul gandhi tweet, rg tweets
rg tweets
author img

By

Published : Dec 5, 2021, 8:07 PM IST

டெல்லி: பயங்கரவாதிகள் என நினைத்து ராணுவத்தினர் நடந்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த நாட்டில் சொந்த மண்ணில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாத சூழல் உருவாகியிருப்பதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக இச்சம்பவம் குறித்து விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "இந்தச் செய்தி என் மனதை உலுக்குகிறது. அரசு இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். உள்துறை அமைச்சகம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. சொந்த நாட்டில், சொந்த மண்ணின் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை," என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் தலைமை ட்விட்டர் பக்கத்தில், ''இது நரேந்திர மோடி அரசின் தோல்வி. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது'' என்று தெரிவித்துள்ளது.

நாகாலாந்து மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வீடு திரும்ப காத்துக் கொண்டிருந்த நிலையில், காணாமல் போயினர்.

இணையதள, தொலைபேசி சேவைகள் முடக்கம்

இதனையடுத்து சகத் தொழிலாளர்கள் அவர்களைத் தேடியபோது, டிரக் வாகனம் ஒன்றில் 13 சுரங்கத் தொழிலாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர்தான் பயங்கரவாதிகள் என சந்தேகித்து 13 பேரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதனால் கொந்தளித்துப் போன அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்புப் படையினரது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக் குழு ஒன்றை நாகாலாந்து அரசு அமைத்துள்ளது. மேலும் அசம்பாவிதங்கள், வன்முறைச் சம்பவங்கள் தொடராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கைப்பேசி, இணையதளம், குறுந்தகவல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை; சிறைக்கைதி சாட்சியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.