ETV Bharat / bharat

weekly rasipalan: காதலர்களுக்கு சிறந்த வாரம்! - வார ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான ஜூலை 4ஆவது வாரத்திற்கான ராசி பலன்களை காண்போம். இது ஜூலை 23-இல் தொடங்கி ஜூலை 29-ஆம் தேதி வரையிலான வார ராசி பலன்களை உள்ளடக்கியதாகும்.

Weekly Horoscope in july fourth week for 12 zodiac signs

author img

By

Published : Jul 23, 2023, 6:57 AM IST

மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமான வாரமாகவே இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் புதிய நம்பிக்கைகளை வரவேற்று சில புதிய வேலைகளைச் செய்ய முயற்சிப்பார்கள், அதில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். காதலிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இருப்பினும், எப்போதாவது சண்டைகள் சில விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கக்கூடும், ஏனெனில் சிக்கல் எங்கு உள்ளது என்பதை உங்களால் சரியாகக் கண்டுபிடிக்க முடியாது.

வேலை செய்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவால் இந்த வாரம் சாதகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சில புதிய நபர்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் நட்புறவு கொள்ளக்கூடும், இதன் காரணமாக உங்கள் தொழிலில் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. அவர்களின் கடின உழைப்பு வெற்றியைத் தரும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு வெற்றிகரமான வாரமாக இருக்கும். உங்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் ஆசை நிறைவேறும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. வேலை செய்பவர்கள் சற்று மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட்டாலும், அவர்களின் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். வருமானம் நன்றாக இருக்கும், சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

சிறுசிறு செலவுகள் ஏற்படலாம், வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். குறிப்பாக இளவயதினரும் திருமணமானவர்களும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நல்ல அணுகுமுறையால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். காதலிப்பவர்களுக்கு வளமான நேரமிது, மேலும் உங்கள் உறவில் நீங்கள் முன்னேற்றமடையலாம். நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய வாரமாக இருக்கும்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பான வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் திருப்தியடைந்து வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமையாக இருப்பார்கள். காதலிப்பவர்களுக்கு சாதகமான நேரமிது. உங்கள் உறவை வலுப்படுத்த நீங்கள் நிறைய முயற்சி செய்வீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வேலையிலும் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.

உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில புதிய வேலைகளையும் கொடுக்கலாம், மேலும் அவர் உங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கலாம், எனவே உங்கள் வேலையை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யுங்கள். வியாபாரம் செய்பவர்கள் அதில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நன்றாக படிப்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவில் கவனம் செலுத்துவது நல்லது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்தி, உங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. காதலிப்பவர்களுக்கு நேரம் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது, ஆனால் உங்கள் புத்திசாலித்தனத்தால் நீங்கள் காதலிப்பவரின் இதயத்தை வெல்வீர்கள். வாரத் தொடக்கத்தில், ஏதாவதொரு வெளியூர் பயணத்தை மேற்கொள்வீர்கள்.

நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மன அமைதி தரும் வாரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மனநிறைவு ஏற்படும். வீட்டில் விஷேசம் நடக்கவிருப்பதால், சொந்தபந்தங்கள் வீட்டிற்கு வந்து செல்வர். இதனால் வீடு கலகலவென இருக்கும். உங்கள் நம்பிக்கை மேலும் வலுவடையும். இதனால், வியாபாரத்தில் சில புதிய ரிஸ்க்கு எடுக்கலாமென யோசிப்பீர்கள்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமான வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். தங்கள் உறவில் காதலையும் காண்பார்கள். காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் காதலை சொல்வதற்கு சரியான நேரமிது, இதை விட்டால் உங்கள் காதலைச் சொல்வதில் தாமதம் ஏற்படக்கூடும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள், இதனால் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள்.

இந்த வாரம் செலவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். உங்கள் வருமானத்திற்கு மீறிய செலவு என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்களுடன் பணிபுரியும் நபர்களின் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள், நீங்கள் இப்போது வேலையில் வலுவான நிலையில் இருக்க அவர்களும் காரணமாக இருப்பார்கள்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வாரமாக இருக்கிறது. திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரிசெய்ய சில புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், உங்களது எண்ணங்களை உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலிப்பவர்களுக்கு இது சாதகமான நேரமாக இருக்கிறது.

நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்வீர்கள், ஏனெனில் அவற்றை முடிப்பதற்கான ஆற்றலும் கடின உழைப்பும் உங்களிடம் இருக்கிறது. எனவே, எந்த வேலையை எப்பொழுது முடிப்பது என திட்டமிட்டு வேலை செய்து, சரியான நேரத்தில் உங்கள் வேலைகளை முடியுங்கள். இந்த வாரம் வருமானத்திற்கு குறைவில்லாத வாரமாக இருக்கும். நீங்கள் போடும் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள், இதன் காரணமாக உங்கள் வருமானம் மேலும் அதிகரிக்கும், எனவே நிதி நிலையில் வலுவாக உணர்வீர்கள்.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமைகிறது. காதலிப்பவர்களுக்கு சாதகமான நேரமிது, உறவில் உங்கள் அன்பு அதிகரிக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை வலுவாக்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்கலாம். வாரத் தொடக்கத்தில் தேவையில்லாத செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் நன்றாக இருப்பதால் எந்த பிரச்சனையும் வராது. ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசுத் துறையினரால் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

அரசு வேலைக்கு முயற்சி செய்கிறீர்களென்றால் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். நிறுத்திவைத்திருந்த வேலைகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். உங்கள் சமூக அந்தஸ்தும் வலுவாக மாறும். அதிர்ஷ்டம் மேலோங்கி இருப்பதால், நின்ற வேலைகளும் நிறைவேறும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நன்றாக இருக்கும். மாணவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். படிப்பில் அதிக கவனம் தேவை.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு நற்பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையை விடுத்து வெளிநபர் மீது உங்களுக்கு காதல் ஏற்படலாம், அதைத் தவிர்க்க முயற்சிப்பது நல்லது, இல்லையெனில், உங்கள் திருமண வாழ்க்கைக்கு பங்கம் ஏற்பட்டுவிடும். காதலிப்பவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். உங்கள் உறவு ரொமாண்டிக்காக மாறக்கூடும்.

வாரத் தொடக்கத்தில் பணவரவு ஏற்படும், இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தக்கூடும். உங்கள் மனதில் ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகள் நிறைந்திருக்கும், மேலும் நீங்கள் வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சமுதாயத்திலும் நல்ல முன்னேற்றம் காணலாம். வேலை செய்பவர்களுக்கு சிறப்பான நேரமிது. உங்கள் மனதை அங்கும் இங்கும் அலைபாயவிடாமல் கவனமாக வைத்திருந்தால், நீங்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் சற்று அதிருப்தியுடன் காணப்படுவார்கள். மாமியாரின் அதீத குறுக்கீடு உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். ஒன்றாக சேர்ந்து எங்காவது வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கோவிலுக்கு கூடச் செல்லலாம். குடும்பப் பொறுப்புகளைப் புரிந்து கொண்டு வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய நேரமிது.

அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம், ஆனால் திடீரென்று நீங்கள் செய்யும் வேலைகளில் தடைகள் ஏற்படலாம், எனவே மிகவும் கவனமாக செயல்படுங்கள். வியாபாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், எனவே உங்கள் நிலையைத் தக்கவைக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இப்போது புதிதாக வேலையைத் தேடிப் பெறுவதற்கு கூட சாத்தியமில்லை.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையும். வாழ்க்கைத்துணையின் பேச்சில் ஏற்பட்ட மாற்றத்தால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அவர்கள் கசப்பான வார்த்தைகளைச் சொல்லலாம், எனவே வாக்குவாதங்களில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதிலாக, அமைதியாக வேலை செய்வது நல்லது. காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். உங்கள் காதலியுடன் நெருக்கமாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சலிப்பு நீங்கி வேலையில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தொழில் பார்ட்னரால் தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும்.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு சாதகமான வாரமாக இருக்கிறது. திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை அனுபவித்து வாழ்வார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை தனது அன்பான வார்த்தைகளாலும் அவரது பாணியாலும் உங்கள் இதயத்தை வெல்வார். நீங்கள் இப்போது உங்கள் வாழ்க்கைத்துணையை இன்னும் அதிகமாக விரும்புவீர்கள். உங்கள் உறவில் ஒருவித புதுமையை நீங்கள் அனுபவிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு சாதகமான காலமிது.

வாரத் தொடக்கத்தில், தொழில் சார்ந்த தொலைதூரப் பயணம் செல்லலாம், இந்த பயணத்தின் போது சந்திக்கும் நபர்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சாதகமான நேரமிது. எதிரிகளை துடைத்து எறிந்து விட்டு வேலையில் உறுதியாக நிற்பீர்கள். உங்கள் மேலதிகாரியும் உங்கள் வேலையைப் பார்த்து ஈர்க்கப்படலாம். மாணவர்களுக்கு நல்ல நேரமிது.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், உங்கள் உறவில் வலுவாக முன்னேறி, உங்கள் காதலியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். நீங்கள் அவர்களுக்கு ஒரு அற்புதமான பரிசையும் கொடுப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை குடும்பத்தின் மீதான அவரது கடமைகளை நன்கு புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல பலன் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து ஆதாயமும் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த வாரம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். இச்சமயத்தில் சில புதிய நபர்களைச் சந்தித்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதனால் தொழில் லாபகரமாக இருப்பதோடு, வருமானமும் அதிகரிக்கும். இப்போது உங்கள் செலவுகள் குறையக்கூடும். மதம் சார்ந்த பணிகளுக்காகவும் கொஞ்சம் செலவு செய்வீர்கள்.

இதையும் படிங்க: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் புதிய சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.