மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு புதிய மகிழ்ச்சியைத் தரும் வாரமாக உள்ளது. திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள். காதலிப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் உறவில் அன்பு மற்றும் ஈர்ப்பு இருக்கலாம். காதலிப்பவர்களுக்குத் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த வாரம் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். மாணவர்கள் இப்போது தாங்கள் படிப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளவும் முயற்சிப்பீர்கள். இந்த நேரம் உங்களுக்கு நன்றாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
ரிஷபம்: இந்த வார ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் குறையும். உங்கள் இருவருக்கிடையேயுள்ள அன்பு அதிகரிக்கும். ஒருவருக்கொருவரின் நெருக்கம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் பங்குகள் வாங்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். சில புதிய நபர்களும் வியாபாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உதவலாம். வியாபாரத்தில் சகோதரர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக உள்ளது. உங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக உள்ளது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையின் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் இருவருக்குமிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றிய அன்பு மற்றும் புரிதலுடன் உறவை மேம்படுத்துவீர்கள். காதலிப்பவர்களுக்கு நேரம் பலவீனமானதாக உள்ளது. உங்கள் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இது உங்கள் நிலையை வலுப்படுத்தும். மாணவர்களுக்கு இந்த நேரம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் ஒரு அட்டவணையை உருவாக்கி அதற்கேற்ப முயற்சி எடுக்க வேண்டும். வாரத் தொடக்கத்தில் காயம் அல்லது விபத்து ஏற்படலாம். கவனமாக வாகனம் ஓட்டுங்கள். மன உளைச்சல் ஏற்படலாம். வார நடுப்பகுதியில் இருந்து நிலைமைகள் சிறப்பாக இருக்கும். உங்கள் உடல்நல ஆரோக்கியமும் மேம்படும். சில பழைய பிரச்னைகளும் நீங்கும்.
கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வார ஆரம்பம் நன்றாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவு சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் நீங்கள் அவர்களைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வியாபார நுண்ணறிவு மூலம், வியாபாரத்தை சரியான திசையில் முன்னோக்கி கொண்டு செல்வீர்கள். சிலரின் ஆதரவைப் பெறுவீர்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்வதன் மூலம் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கலாம். எனவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் பலம் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நெருங்கி வருவது அவர்களின் மனதை வெல்வதில் வெற்றி பெறும். காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். சிலர் மதப் பணிகளுக்காகவும், தனிப்பட்ட தேவைகளுக்காகவும் நிறைய செலவு செய்யலாம். இந்த வாரம் வியாபாரத்திற்கு சாதகமான வாரம். வியாபாரத்தில் முன்னேறத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் இப்போது மகிழ்ந்து படிப்பதோடு நல்ல பலன்களையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.
கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த நேரம் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவரின் புரிதல் மேம்படும். இதன் காரணமாக உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். வேலையை மாற்ற நினைத்தால் அதிலும் இந்த வாரம் வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிகள் இப்போது பலனளிக்கும். உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பை முழுமையாக அனுபவிப்பீர்கள். கடினமாக உழைத்தால் அதன் மூலம் நல்ல பலன்களையும் பெறுவீர்கள். உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
துலாம்: வாரத் தொடக்கத்தில் நீங்கள் சில சவால்களை எதிர் கொள்வீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு காலம் சவாலாக இருக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தங்கள் துணை முன்னேறத் தூண்டுவீர்கள். வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். பணியிடத்தில் எங்காவது சில பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் இப்போது மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைக்கத் தயங்காத மாணவர்கள் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உடல்நல ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சில சிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும். திருமணமானவர்கள் இல்லற வாழ்வின் அனைத்து வேலைகளையும் முழு நேர்மையுடனும் பொறுப்புடனும் செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு சில பரிசுகளையும் கொண்டு வருவீர்கள். காதல் வாழ்க்கைக்கு நேரம் சாதகமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். ஆனால், யாராவது உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறலாம். எனவே கவனமாக இருங்கள். மாணவர்கள் இப்போது கவனமாக படிக்க வேண்டும். உங்கள் பாடங்களில் நீங்கள் நல்ல பிடியைப் பெற முடியும். போட்டித் தேர்வில் வெற்றி பெற நல்ல வாய்ப்புகள் உள்ளது. உங்கள் உடல்நல ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
தனுசு: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் சில ரகசியத் திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். குடும்பச் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக உங்கள் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியுடன் அன்பு அதிகரிக்க முழு வாய்ப்புகள் உள்ளது. அதைத் தவிர்க்க முயற்சிப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். வங்கியில் இருப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நேரம் சற்று கடினமாக இருந்தாலும், கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். உங்கள் வயிறு தொடர்பான நோய்கள் தொந்தரவு செய்யலாம், எனவே கவனம் செலுத்துங்கள்.
மகரம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக உள்ளது. தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழல் குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். முதலீடு செய்பவர்களுக்கு கடின உழைப்பினால் ஏற்ற பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த நேரம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பச் சூழல் உங்கள் படிப்பையும் எதிர்மறையாக பாதிக்கலாம். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது. உடல்நல ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். உடலில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
கும்பம்: இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பரஸ்பர விவாதத்தின் மூலம் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக உள்ளது. உங்கள் காதலியுடன் நன்றாகப் பேசுங்கள். வார தொடக்கத்தில் நண்பர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு அமையும். வேலை செய்பவர்களுக்கு நல்ல காலம் உள்ளது. கடின உழைப்பால் முன்னேறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் அரசாங்கத் துறையினரால் சற்று டென்ஷனைப் பெறலாம். மாணவர்களுக்கு இந்த முறை தங்கள் படிப்பில் முன்னேற்றத்தைப் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு கலவையான வாரமாக உள்ளது. இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.
மீனம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. தாங்கள் காதலில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். வாரத்தின் தொடக்கத்திலேயே சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. நண்பர்களை சந்திப்பீர்கள். உங்கள் வேலையை அவர்களுடன் விவாதிப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. ஆனால், யாருடனும் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரம் செய்வதற்கு நேரம் செழிப்பாக உள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல பலன்கள் கிடைக்கும். இது அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும். உங்கள் உடல்நல ஆரோக்கியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.
இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: பிப்ரவரி 2ஆம் வாரத்திற்கான ராசிபலன்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது.?