நாட்டின் கோவிட்-19 நிலவரம் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் செய்தியாளரிடம் பேசினார். அதில், கோவிட்-19 இரண்டாம் அலையை பொதுமக்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, தற்போதைய கோவிட்-19 சூழலை பார்க்கும்போது தேவையின்றி வெளியே செல்லக் கூடாது. மாஸ்க் அணிவது மிகவும் கட்டாயம். முடிந்தால் வீட்டில் உறவினருடன் இருக்கும்போது கூட மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். வெளிநபர்களை வீட்டிற்குள் அழைக்க வேண்டாம்.
அதேவேளை, மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேவையற்ற அச்சம் மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும். அரசு தேவையான ஆக்ஸிஜன், மருந்துகள் உள்ளிட்டவற்றை கையிருப்பாகக் கொண்டுள்ளது என்றார்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு, அதில் எந்தச் சிக்கலும் இல்லை. தயக்கமின்றி மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்