புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "வாக்காளர் விவரங்களைப் பெற்று அதன்மூலம் செல்போன் எண்களைத் தொடர்புகொண்டு பாஜகவுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப்பட்டது.
இது தொடர்பாக பாஜக வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி தலைமைத் தேர்தல் அலுவலருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்படும்.
தேவைப்பட்டால் சட்டரீதியாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள இருக்கிறோம். தேர்தலின்போது கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இதைக் காவல் துறை கண்காணிக்க வேண்டும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை (மார்ச் 28) கட்சியின் மூத்தத் தலைவர் வீரப்பமொய்லி வெளியிட இருப்பதாக நாராயணசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது - உயர் நீதிமன்றம் கேள்வி