ETV Bharat / bharat

"விரைவில் மும்பை திரும்புவோம்" - ஏக்நாத் ஷிண்டே!

author img

By

Published : Jun 28, 2022, 5:32 PM IST

கவுஹாத்தியில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வந்துள்ளோம், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Shinde
Shinde

கவுஹாத்தி: மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான மஹாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கியுள்ளார். ஷிண்டே உள்பட 38 சிவசேனா எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். 38 சிவசேனா எம்எல்ஏக்கள் மற்றும் 9 சுயேச்சை எம்எல்ஏக்கள் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.

இதனிடையே கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகுதி நீக்கம் தொடர்பாக ஜூலை 12ஆம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் கவுஹாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, "இங்குள்ள அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே கவுஹாத்தி வந்துள்ளோம். விரைவில் மும்பை திரும்புவோம். பால் தாக்கரேயின் இந்துத்துவ கொள்கையுடன் நாங்கள் எப்போதும் இருப்போம். அதையே முன்னெடுத்துச் செல்வோம்" என்று கூறினார்.

கவுஹாத்தியில் உள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் மும்பைக்குப் புறப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: மஹாராஷ்டிராவில் மஹா விகாஸ் அகாதி பெரும்பான்மை இழப்பு - ஏக்நாத் ஷிண்டே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.