ETV Bharat / bharat

2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் - திரௌபதி முர்மு

author img

By

Published : Jan 31, 2023, 12:27 PM IST

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் 2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் உரையுடன் இன்று (ஜனவரி 31) தொடங்கியது. அப்போது மும்மு, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் 2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளில், கடந்த கால பெருமைகளையும், நவீன அத்தியாயங்களையும் உள்ளடக்கிய வளர்ந்த இந்தியாவை உருவாக்க மக்கள் முயற்சி செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால அரசாங்கத்தின் கீழ், நாடு பல நேர்மறையான மாற்றங்களைக் கண்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனின் தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருப்பது மிகப்பெரிய மாற்றம். உலக நாடுகள் நமது நாட்டை பார்க்கும் விதம் மாறிவிட்டது. நமது பிரச்சினைகளைத் தீர்க்க மற்றவர்களைச் சார்ந்து இருந்த நிலை மாறி, உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பல தசாப்தங்களாக மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. நீண்டகாலமாக எதிர்பார்த்த நவீன உட்கட்டமைப்புகள் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் டிஜிட்டல் நெட்வொர்க்கின் விரிவாக்கம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை முக்கிய அங்கம் வகிக்கிறது.

இந்தியாவில் நிலையான, அச்சமற்ற மிகப் பெரிய கனவுகளை நிறைவேற்றும் அரசாங்கம் உள்ளது. இது ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாங்கமாக உள்ளது. எனது அரசாங்கம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் அதிகாரத்தை கட்டியெழுப்பியுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா முதலில், குடிமகன் முதலில் - பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.