மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே இரண்டாம் தேதி வெளிவந்தன. இதில் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகான வன்முறையில் பாஜகவைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை திரிணாமூல் காங்கிரஸ் மறுத்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்திலுள்ள மிதினாப்பூர் பகுதியில், மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி.முரளிதரன் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மேற்கு மிதினாப்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் என் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் என் வாகனத்தின் ஜன்னல்கள் சேதமடைந்ததோடு, தனிச்செயலரும் காயமடைந்தார். இதனால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் அரங்கேறும் வன்முறை சம்பவங்களின் கள நிலவரத்தை ஆராய சி.ஆர்.பி.எப் மற்றும் கூடுதல் செயலாளர் நிலையிலான அலுவலர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை, வெளிவிகாரத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
TMC goons attacked my convoy in West Midnapore, broken windows, attacked personal staff. Cutting short my trip. #BengalBurning @BJP4Bengal @BJP4India @narendramodi @JPNadda @AmitShah @DilipGhoshBJP @RahulSinhaBJP pic.twitter.com/b0HKhhx0L1
— V Muraleedharan (@VMBJP) May 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TMC goons attacked my convoy in West Midnapore, broken windows, attacked personal staff. Cutting short my trip. #BengalBurning @BJP4Bengal @BJP4India @narendramodi @JPNadda @AmitShah @DilipGhoshBJP @RahulSinhaBJP pic.twitter.com/b0HKhhx0L1
— V Muraleedharan (@VMBJP) May 6, 2021TMC goons attacked my convoy in West Midnapore, broken windows, attacked personal staff. Cutting short my trip. #BengalBurning @BJP4Bengal @BJP4India @narendramodi @JPNadda @AmitShah @DilipGhoshBJP @RahulSinhaBJP pic.twitter.com/b0HKhhx0L1
— V Muraleedharan (@VMBJP) May 6, 2021
இதையும் படிங்க:ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி... ரகசியமாக வெளியேறிய மருத்துவர்கள்!