விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் அணையின் கொள்ளளவு 32 அடியாகும். கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் தற்போது 29.8 அடிவரை அணையில் நீர் நிரம்பியது. இதனால், அணை எந்த நேரமும் திறக்கப்படலாம்.
இதனால், வீடூர் அணையை ஒட்டியுள்ள புதுச்சேரி கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதையும் படிங்க: பிற ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!