முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் பிறந்தநாளான இன்று(டிச. 4) அவரது நினைவை போற்றும் விதமாக தபால் தலை ஒன்றை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ளார். அதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது பதிவில் அவர், ஐ.கே. குஜ்ரால் மெத்த படித்த, பண்பட்ட மனிதர் ஆவார். நாகரீகமான முறையில் அரசியல் வாழ்வில் செயல்பட்ட அவர், எத்தகைய சவாலான சூழலிலும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர் என்றார்.
மேலும், தற்போதைய தலைமுறை, நாட்டிற்கு பங்காற்றிய பெருந்தலைவர்கள் பற்றி முறையாக் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். 1997-98 ஆண்டுகளில் நாட்டின் பிரதமராக இருந்த ஐ.கே. குஜ்ரால் 2012ஆம் ஆண்டு காலமானார்.
இதையும் படிங்க: மாநில அரசுக்கு எதிராக கர்நாடகாவில் நாளை பந்த்!