லக்னோ: இந்தியாவில் தோன்றாத எந்த மதத்திற்கும் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுவது முற்றிலும் அநியாயம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய செய்தித் தொடர்பாளர் விஜய் சங்கர் திவாரி உத்தரப்பிரதேச மாநிலம் கேந்திராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,“மதம் மாறியவர்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல் சிறுபான்மையினருக்கான திட்டங்களையும் பயன்படுத்துவது என, இரட்டை இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றனர்.
மதம் மாறுபவர்கள் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறக்கூடாது என்று எந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிர்ப்பாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறியுள்ளனர், அவர்களுடைய வழிபாட்டு முறை மாறிவிட்டது. மதம் மாறியவர்கள் தெய்வ சிலைகளை அவமதிப்பது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்றும் உள்ளது.
இவர்கள் மதம் மாறினாலும் தங்கள் பெயரை மாற்றுவது இல்லை, துணை சாதியைப் பயன்படுத்துவதை நிறுத்துவது இல்லை. இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுகிறார்கள். இது தேச விரோதம்.
மதம் மாறினாலும் இட ஒதுக்கீட்டிற்கு, இந்திரா மற்றும் நேரு ஆகியோர் எதிராக இருந்தனர். ஆனால் ராஜீவ், மன்மோகன், தேவகவுடா ஆகியோர் ஆதரவாக இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்மாவிற்குப் பதிலாக லெமன் ஜூஸை உடலில் ஏற்றியதால் டெங்கு நோயாளி பலி