ETV Bharat / bharat

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலம்!

manakula vinayagar kovil : புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 2:37 PM IST

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலம்

புதுச்சேரி: இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாபடும் நிகழ்வு என்றால் அது விநாயகர் சதுர்த்திதான். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணி முதலே கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது. அதன் பிறகு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு விநாயகர் தரிசித்து வருகின்றனர். மேலும் தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு விழுப்புரம் மற்றும் கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தொடர் விடுமுறைக்காரணமாக புதுச்சேரிக்கு வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது போன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு புதிய யானை.. கும்ப மரியாதையுடன் கோலாகல வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.