ETV Bharat / bharat

அரசியலமைப்பு புனிதமானது- வெங்கையா நாயுடு!

இந்திய அரசியலமைப்பு புனித நூல்கள் போன்று புனிதமானது என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

Venkaiah Naidu
Venkaiah Naidu
author img

By

Published : Sep 28, 2021, 6:59 PM IST

Updated : Sep 28, 2021, 7:18 PM IST

ஜோத்பூர் : ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா எழுதிய 'சன்விதான், சம்ஸ்கிருதி ஆர் ராஷ்ட்ரா' என்ற நூலின் வெளியீடு விழா ஜோத்பூர் சர்க்யூட் ஹவுஸில் நடைபெற்றது.

இந்த விழாவில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். அப்போது, அரசியலமைப்பை உச்சமாகவும் புனித நூலாகவும் குறிப்பிட்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசியலமைப்பு புனித நூல்கள் போன்று புனிதமானது. இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பு மக்களுக்கு உரிமைகளை வழங்குகிறது. இதற்கு நாம் விஸ்வாசமாக இருத்தல் வேண்டும். சாதி, மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் நமது கலாசாரம் பன்முகத் தன்மை கொண்டதாக இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணவல்லது.

அந்த வகையில், அரசியலமைப்பு மனித உரிமைகளுக்கான உலகளாவிய ஆவணம். இந்திய வேதங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டதுபோல் நமது அரசியலமைப்பு உள்ளது” என்று வெங்கையா நாயுடு கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உள்நாட்டில் பாதுகாப்பு தொழிற்நுட்பம்- வெங்கையா நாயுடு

Last Updated : Sep 28, 2021, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.