டெல்லி: மாட்டு சாண கேக்குகள் தயாரிக்கும் நிலையத்தை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நிறுவவுள்ளது. டெல்லியில் உள்ள தகனம் செய்யும் பகுதிகளுக்கு இந்த கேக்குகள் விநியோகப்பட்டு, விறகு மாற்றாக இவை பயன்படுத்தப்படும் என அந்த அமைப்பின் தலைவர் கபில் கன்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தகனம் செய்யப்படும் இடங்கள் நிரம்பி காணப்படுவதுடன், விறகு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு, மாட்டு சாண கேக்குகள் தயாரிக்கும் நிலையத்தை அமைக்கவுள்ளது. இந்த கேக்குகளை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விறகுகளை விட இந்த மாட்டு சாண கேக்குகளின் விலை குறைவு என்பதால், ஏழை மக்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரங்கள் குஜராத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன.