மும்பை: இந்தியாவில் 75 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் அகில இந்திய வானொலியில் ஒலித்த தமிழ் செய்திகளின் குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசாமி நேற்று (ஆகஸ்ட் 13) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது மகள் மற்றும் மகனின் குடும்பத்தாருடன் மும்பையில் வசித்து வந்தார்.
சரோஜ் நாராயணசாமி அகில இந்திய வானொலியின் செய்திச் சேவைப் பிரிவின் தமிழ்ச் செய்திப்பிரிவில் தமிழ் செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பிரிவின் செய்திப் பொறுப்பாளராக இருந்தார். அக்காலகட்டத்தில் ரேடியோவை ஆர்வத்துடன் கேட்பவர்கள் இவரின் குரல், தெளிவான பேச்சு ஆகியவற்றை அதிகம் விரும்பினார்கள்.
மேலும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராக சரோஜ் பணியாற்றியுள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பட்டம் பெற்றார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் பிராட்காஸ்டிங் ஜர்னலிசம் படித்துள்ளார்.
90-களின் தமிழ் மக்களுக்கு அவரது கம்பீர குரலில் செய்திகளை தந்த சரோஜ் நாராயணசாமி மறைந்ததற்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது மறைவிற்கு, இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
-
அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்!
— M.K.Stalin (@mkstalin) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
">அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்!
— M.K.Stalin (@mkstalin) August 14, 2022
மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்!
— M.K.Stalin (@mkstalin) August 14, 2022
மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இதையும் படிங்க:பங்குச்சந்தை பிதாமகன் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்