டெல்லி: 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திரைக் கலைஞர்களுக்குத் தேசிய விருதுகளை வழங்கினார். மேலும் இந்தியத் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த வருடம் பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
-
#NationalFilmAwards || Veteran actress Waheeda Rehman receives the Dadasaheb Phalke Lifetime Achievement Award.🏆🎥@rashtrapatibhvn | @ianuragthakur | @MIB_India | @PIB_India |@nfdcindia pic.twitter.com/328FKcCtEQ
— All India Radio News (@airnewsalerts) October 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#NationalFilmAwards || Veteran actress Waheeda Rehman receives the Dadasaheb Phalke Lifetime Achievement Award.🏆🎥@rashtrapatibhvn | @ianuragthakur | @MIB_India | @PIB_India |@nfdcindia pic.twitter.com/328FKcCtEQ
— All India Radio News (@airnewsalerts) October 17, 2023#NationalFilmAwards || Veteran actress Waheeda Rehman receives the Dadasaheb Phalke Lifetime Achievement Award.🏆🎥@rashtrapatibhvn | @ianuragthakur | @MIB_India | @PIB_India |@nfdcindia pic.twitter.com/328FKcCtEQ
— All India Radio News (@airnewsalerts) October 17, 2023
தமிழ்நாட்டைச் சேர்ந்த வஹிதா ரஹ்மான் செங்கல்பட்டில் பிறந்தவர். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியம் கொண்ட வஹிதா ரஹ்மான், குடும்பச் சூழல் காரணமாக நடிப்பில் ஈடுபட்டார். 1955ஆம் ஆண்டு ரோஜூலு மராயி படம் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கினார்.
தமிழ் சினிமாவில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் கதவைத் திறக்க, சிஐடி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். பாலிவுட் இயக்குநர் குரு தத் இயக்கத்தில் வஹிதா ரஹ்மான் இயக்கிய பியாஷா படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்தி சினிமாவின் பிரபல நடிகர்களான திலீப் குமார், ராஜ் கபூர், ராஜேஷ் கண்ணா ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தார்.
வஹிதா ரஹ்மானுக்கு 1972இல் பத்மஸ்ரீ விருதும், 2011இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் இதற்கு முன் அமிதாப்பச்சன், சிவாஜி கணேசன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் 'லியோ' தரப்பு வழக்கறிஞர்களின் கார் விபத்து.. இருவருக்கு லேசான காயம்.. நடந்தது என்ன?