ETV Bharat / bharat

வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - டெல்லியில் கடும் குளிர்

வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும் என்றும் டெல்லியில் கடுமையான குளிர் நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்

author img

By

Published : Dec 26, 2022, 9:25 AM IST

டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை குறைந்து வருவதால், அடுத்த 5 நாட்களுக்கு வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் பஞ்சாபின் பல பகுதிகளிலும், ஹரியானா மற்றும் சண்டிகரில் ஒரு சில பகுதிகளிலும் மிகுந்த மூடுபனி நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒருவாரமாக வட மாநிலங்களில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் மிகுந்த மூடுபனி மூன்று நாட்களுக்கு நிலவும். அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கடுமையான குளிர் நிலவும். குறிப்பாக டிசம்பர் 27ஆம் தேதி பஞ்சாபின் சில மாவட்டங்களில் மூடுபனி மிகவும் அதிகமாக இருக்கும்.

மொத்தமாக அடுத்த 5 நாட்களுக்கு வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், டெல்லி, பிகார், மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிசா, அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் நேற்று (டிசம்பர் 25) அதிகாலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது. முன்னதாக டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியில் கடும் பனிமூட்டம் 14 ரயில்கள் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.