ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் ரயில்வேத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றுப் பேசினார்.
நிகழ்வில் பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் நிலைமைக்கேற்ப இந்திய ரயில்வே(Indian Railways) உயர்ந்து செயல்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத சவால்கள் கோவிட்-19 காரணமாக ஏற்பட்டாலும் தொடர்ந்து இயங்குவதற்கும் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கும் ரயில்வே புதிய முயற்சிகளை மேற்கொண்டது.
கோவிட் நோய் தனிமைப்படுத்துதலுக்கான பெட்டிகள், தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்(Oxygen Express) ரயில்கள் ஆகியவற்றை ரயில்வேத்துறை செய்துகாட்டி, பெருந்தொற்றை சிறப்பாகக் கையாள நாட்டிற்கு இந்திய ரயில்வே உதவியது.
ரயில்வேயின் ஆக்கப்பூர்வமான பணி காரணமாக சரக்குகள் மற்றும் உணவுப்பொருட்களின் பற்றாக்குறை பெருமளவு குறைக்கப்பட்டது. தேவைப்படும் நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கைப் பாதுகாப்பு சாதனம் என்பதை ரயில்வே நிரூபித்துள்ளது.
தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக தொடர வேண்டும். குறிப்பாக ரயில்களையும் ரயில்நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பதை தமது பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வெண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Second Taj Mahal - மனைவிக்கு தாஜ் மஹால் பரிசளித்த கணவர்!