நடிகர் விவேக் நேற்று (ஏப்.16) நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு விடுத்துள்ள இரங்கல் பதிவில், " பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் மறைவு பற்றி அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் தனது இன்றியமையாத நகைச்சுவை, ஆற்றல்மிக்க நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். " என இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாய்ஸ்க்கு அவர் நடிகர் மட்டுமில்லை: மிஸ் யூ மங்களம் சார்