ஹைதராபாத்: ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காதலர் தினம் நெருங்கும் நிலையில், "காதலர் தின வாரம்" நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதில் முதல் நாளான நேற்று(பிப்.7) ரோஸ் டே கொண்டாடப்பட்டது. "ரோஸ் டே"-வில் மக்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ரோஜாப்பூக்களை கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தும் நாளாகும்.
அதைத்தொடர்ந்து காதலர் தின வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(பிப்.8) "ப்ரொப்போஸ் டே" கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தாங்கள் காதலிக்கும் நபரிடம் காதலை அல்லது விருப்பமானவர்களிடம் அன்பை கூறும் நாளாகும். இந்த நாளில் காதலர்கள் மட்டுமே ப்ரொப்போஸ் செய்ய வேண்டும் என்று சுருக்காமல், சிங்கிள்ஸ், திருமணமானவர்கள், ஒரு தலையாக காதலிப்பவர்கள், மூத்த தம்பதிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது அன்புக்குரியவர்களிடம் தங்கள் உணர்வுகளை எடுத்துரைக்கலாம்.
இந்த ப்ரொப்போஸ் டே-வில் உங்கள் அன்புக்குரியவர்களிடம் சர்ப்ரைசாக ப்ரொப்போஸ் செய்ய சில வழிகளைப் பார்க்கலாம்...
கேண்டில் லைட் டின்னர்: ப்ரொப்போஸ் டே-வில் உங்கள் பார்ட்னரை கேண்டில் லைட் டின்னருக்கு அழைத்துச் சென்று, அங்கு ப்ரொப்போஸ் செய்யலாம். ஒரு நல்ல உணவகத்தில் அவர்களுக்கென பிரத்யேகமாக கேண்டில் லைட் டின்னர் கொடுப்பது அவர்களை மிகவும் ஸ்பெஷலாக உணர வைக்கும்.
உணவகத்திற்குச் செல்ல விருப்பம் இல்லாவிட்டால், வீட்டிலேயே ஸ்பெஷலான உணவுகளை சமைத்து கேண்டில் லைட் டின்னர் கொடுத்து ப்ரொப்போஸ் பண்ணலாம்.
கடிதம்: கூச்ச சுபாவம் அல்லது இன்ட்ரோவெர்ட்டாக இருப்பவர்கள், கடிதம் மூலம் ப்ரொப்போஸ் செய்யலாம். கடிதம் என்பது உணர்வுகளை கூற ஒரு நல்ல வழி. கடிதத்தைப் பொறுத்தவரை கையெழுத்து, எழுத்துப்பிழை இப்படி எது இருந்தாலும், அது உணர்வுகளை கடத்த எப்போதும் தவறாது.
பரிசுப்பொருட்கள் கொடுப்பதை விட, கடிதம் எழுதுவது உங்கள் பார்ட்னருடன் ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தக்கூடும். கடிதத்துடன் நீங்களே உருவாக்கிய ஹேண்ட்மேட் பரிசுப்பொருட்களை தருவது கூடுதல் சிறப்பு.
ரொமேன்டிக் மூவி டேட்: மூவி டேட் என்பது ப்ரொப்போஸ் செய்ய நல்ல வாய்ப்பு. திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று, படத்தில் ஏதேனும் அழகான தருணங்கள் வரும்போது ப்ரொப்போஸ் செய்யலாம்.
மிக்ஸ் டேப் அல்லது பிளே லிஸ்ட்: உங்களது அன்புக்குரியவர்களுடன் நீங்கள் கடந்து வந்த பாதையையும், அழகிய நினைவுகளையும் எடுத்துரைக்கும் வகையில் பாடல்களை மிக்ஸ் டேப்பாகவோ, பிளே லிஸ்ட்டாகவோ தயாரித்து கொடுத்து ப்ரொப்போஸ் செய்யலாம்.
உங்களது பார்ட்னர் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர், அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள், அவரோடு எப்படி வாழ நினைக்கிறீர்கள் என்பதை எடுத்துரைக்கும் பாடல் வரிகளையும் மிக்ஸ் டேப்பில் இணைக்கலாம்.