ETV Bharat / bharat

மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்க வைகோ கோரிக்கை!

பேரிடர் மீட்புப் பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்கள் இருவரது குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko
vaiko
author img

By

Published : Dec 26, 2020, 1:48 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, நிவர் புயல் தாக்கியபோது, காஞ்சிபுரம் அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் மின் வயர்கள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உதவிப் பொறியாளரான சுந்தரராஜன், பக்கத்து மின் நிலையத்தில் பணியாற்றிய பாக்கியநாதன், தயாளன் ஆகியோரை மின் இணைப்பை சரி செய்யக் கூறியுள்ளார். ஆனால், அவர்களை பணிக்கு அனுப்பிய விவரத்தை, சக பணியாளர்களுக்கு, அவர் தெரிவிக்கவில்லை.

அவர்கள் இருவரும், இரவு கையில் டார்ச் லைட்டுடன் மழைநீர் தேங்கியிருந்த பகுதிக்குச் சென்று, அறுந்து விழுந்து கிடந்த வயர்களைச் சுற்றிக் கொண்டு இருக்கும்போது, மின் நிலையத்திற்கு வந்த மற்றொரு பணியாளர், மின் இணைப்பைக் கொடுத்து விட்டார். இதனால் மின்சாரம் பாய்ந்து, அந்த இடத்திலேயே இருவரும் இறந்தனர். இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட உதவிப் பொறியாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட நான்கு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உயிரிழந்த பாக்கியநாதன், தயாளன் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளனர். பணியின்போது இறந்த காவலர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கும் நிலையில், பேரிடர் மீட்புப் பணியின்போது இறந்த மின்வாரிய ஊழியர்கள் இருவருடைய குடும்பத்திற்கும், ஒரு கோடி ரூபாய் மறுவாழ்வு நிதியும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் ” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 'தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர் பெருந்தோழர் நல்லகண்ணு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.