ETV Bharat / bharat

குஜராத் படகு விபத்து : 18 பேர் மீது வழக்குப்பதிவு! விபத்துக்கான காரணம் என்ன? - குஜராத் படகு விபத்து மாணவர்கள் பலி

Vadodara boat capsize: குஜராத்தில் சுற்றுலா படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vadodara boat capsize
Vadodara boat capsize
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 9:53 AM IST

வதோதரா : குஜராத் மாநிலம் வதோதராவுக்கு பள்ளி மாணவர்கள் அடங்கிய குழு சுற்றுலா சென்று உள்ளது. வதோதரா புறநகர் பகுதியில் உள்ள ஏரியில் மாணவர்கள் குழு படகு சவாரியில் சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கோர விபத்தில் படகில் பயணித்த மாணவர்கள், ஆசிரியர்கள் என 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததனர். ஒட்டுமொத்தமாக 27 பேர் படகில் பயணித்ததாக கூறப்படும் நிலையில் தண்ணீரில் மூழ்கிய உயிரிழந்த 12 மாணாவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டு உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் தண்ணீரில் தத்தளிக்கும் மீதமுள்ள மாணவர்களை தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தமாக 20 பேர் மீட்கப்பட்டு உள்ள நிலையில் அதில் 12 மாணவர்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் முகமது அயன் முகமது அனிஸ் காந்தி (வயது 13), ஃபால்குனிபென் மனிஷ்பாய் படேல் (வயது 45), ரோஷ்னி பங்கஜ்பாய் ஷிண்டே (வயது 10), ருத்வி பிரதிக் ஷா (வயது 10), சாயாபென் சுரதி (வயது 45), ஜஹாபியா முகமது யூனுஸ் சுபேதார் (வயது 10), விஷ்வ் குமார் கல்பேஷ்பாய் நிஜாமா (வயது 10), ராயன் ஹருன் கலிஃபா (வயது 10), சகினா சோகட் அப்துல்ராசூர் (வயது 9), அலிசாபானு மகமது உமர் கோத்தாரிவாலா (வயது 9), முவாவ்சா முகமது மஹிர் ஷேக் (வயது 8), நான்சி ராகுல் மாலி (வயது 8), அயத் அல்தாப் ஹுசேனி மன்சூரி (வயது 9), ஆசியா ஃபரூக் கலீஃபா (வயது 11) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் சுஃபியா ஷௌகத் ஷேக் என்ற மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சடலமாக மீட்கப்பட்ட 14 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் 9 குழுக்கள் அடங்கிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • A case has been registered against 18 people in connection with the death of 12 students and 2 teachers in Vadodara boat capsize incident pic.twitter.com/Kd2wBwtVe9

    — ANI (@ANI) January 19, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உயர் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : குஜராத்தில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு! சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.