திலு ரவுடேலி விருது (Tilu Rauteli Award), அங்கன்வாடி பணியாளர்கள் விருது பெற்றவர்களைப் பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இதனை அறிவித்தார். இந்த விருதுகளுக்கான பரிசுத்தொகை 31,000 ரூபாயிலிருந்து 51,000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் 22 பெண்கள் திலு ரவுடேலி விருதினையும் 22 பெண்கள் அங்கன்வாடி பணியாளர்கள் விருதினையும் பெற்றனர். திலு ரவுடேலி விருது பெற்றவர்களுக்கு 31,000 ரூபாய் ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. அங்கன்வாடி விருது பெற்றவர்களுக்கு 21,000 ரூபாயும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் ஹரித்வார் மாவட்டத்துக்கு வந்த உத்தரகாண்ட் விளையாட்டு அமைச்சர் அரவிந்த் பாண்டே வந்தனாவையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வந்தனா நாட்டுக்கும் உத்தரகாண்டுக்கும் பெருமையைத் தேடி தந்துள்ளார். இந்த விளையாட்டை விளையாட அவர் பல லட்சம் பேருக்கு ஊக்கம் அளித்துள்ளார் " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா