காசிபூர்: குடும்பத் தகராறில் தந்தையை கட்டிப்போட்டு கை விரல்கள் மற்றும் பிறப்புறுப்பை வெட்டியதாக ராணுவத்தில் இருந்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம், காசிபூரை சேர்ந்த முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ராணுவத்தில் இருக்கும் அவரது மகன் அர்பித்துடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத் தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வீட்டில் தனிமையில் இருந்த தன்னை, நண்பர்களுடன் சேர்ந்து கட்டிப்போட்டு அர்பித் துன்புறுத்தியதாக முதியவர் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றி, தன் நண்பர்களுடன் சேர்த்து தனது இடது கை விரல்கள் மற்றும் பிறப்புறுப்பை வெட்டி அர்பித் தப்பியதாக முதியவர் கூறியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் தனியாக மயங்கிக் கிடந்த தன்னை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அவர்களையும் மகன் அர்பித் மிரட்டியதாக முதியவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி மகன் அர்பித் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக உண்மை கண்டறியும் விசாரணை நடத்தியதாகவும், அர்பித்துடன் வந்த மூன்று நண்பர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டதாகவும் போலீசார் கூறினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராணுவத்தில் பணியாற்றிய அர்பித் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: 'நான் கடவுள்' எனக்கூறிய சாமியாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை.. பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!