டேராடூன்: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ராமர் கோயிலை 2024 ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதனையடுத்து ராமர் கோயிலுக்கு வரும் உத்தரகாண்ட் பக்தர்கள் வசதிக்காக விருந்தினர் இல்லம் அமைக்க, அந்த மாநில அரசுத் தரப்பில், உத்தரப்பிரதேச அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. உத்தரகாண்ட் அரசு கோரிக்கையை ஏற்று, உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்து இருந்தது.
மேலும் உத்தரகாண்ட தரப்பில் விருந்தினர் இல்லம் அமைக்க 4,000 சதுர மீட்டர் நிலம் வழங்குமாறு, உத்தரப்பிரதேச மாநிலத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ராமர் கோயில் அமைய உள்ள இடத்திலிருந்து 6.5 கி.மீ தொலைவில் ஒரு இடத்தை அடையாளம் கண்டு, அந்த இடத்தை ஆய்வு செய்து உத்தரகாண்ட அரசிடம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, உத்தரகாண்ட் அதிகாரிகள், உத்தரபிரதேச மாநிலம் கூறிய இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள், ராமர் கோயிலுக்குச் செல்லும்போது தங்குவதற்காக கோயிலின் அருகே விருந்தினர் இல்லம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து இருந்தார்.
தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் அமைய உள்ள இடத்திலிருந்து 6.5 கி.மீ தொலைவில் உத்தரகாண்ட மாநிலத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த அறிக்கையை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்பிப்பார்கள் என்றும், அதன் பின் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் இணைந்து விருந்தினர் இல்லம் கட்டுவதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரகாண்ட மாநிலம் சார்பாக அயோத்தியில் விரைவில் விருந்தினர் இல்லம் கட்டப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் ஆளுநர் - அரசு இடையே உச்சபட்ச மோதல்! அரசுக்கு எதிராக ஆளுநர் போர்க்கொடி! முதலமைச்சர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை! என்ன நடக்குது?