டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரு வாரங்கள் கனமழை பெய்தது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 224 வீடுகள் சேதமடைந்துள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும், தன்னுடைய அக்டோபர் மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் உள்ளனர்.
இதையும் படிங்க : வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்- அதிர்ச்சி காணொலி