ETV Bharat / bharat

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... ரூ.500க்கு சிலிண்டர்.... காங்கிரஸ் வாக்குறுதி - உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல்

உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றால் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கப்படும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சச்சின் பைலட் வாக்குறுதி அளித்துள்ளார்.

Sachin Pilot
Sachin Pilot
author img

By

Published : Feb 1, 2022, 9:30 AM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார். அப்போது அவர் பேசுகையில், “உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பணவீக்கம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு, சமையல் எரிவாயு உருளை ரூ.500க்கு கிடைக்கச் செய்வோம்.

காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை பொறுப்பாக கவனித்துள்ள கட்சி. எங்களுக்கு பொறுப்புணர்வு அதிகம். பாஜக போன்று வீண் விளம்பரங்களில் ஈடுபட மாட்டோம். மாறாக அனைத்து திட்டங்களும் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும்” என்றார்.

மேலும், “மத்தியில் கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துவிட்டது” எனக் குற்றஞ்சாட்டினார். முன்னதாக சச்சின் பைலட் முன்னிலையில் பாஜக விவசாய சங்கத் துணை தலைவர் ரிஷிபால் பாலியன் காங்கிரஸில் இணைந்தார்.

இதையும் படிங்க : பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.