ETV Bharat / bharat

Purola Mahapanchayat: தொலைக்காட்சி விவாதங்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை! - Purola Mahapanchayat news in tamil

உத்தரகண்ட் மாநிலத்தில் மத அமைப்பால் கூட்டப்பட்ட மகா பஞ்சாயத்தில் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 16, 2023, 12:16 PM IST

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் உள்ள புரோலாவில் நேற்று (ஜூன் 15) மத அமைப்புகள் கூட்டிய மகாபஞ்சாயத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் விசாரித்தது. சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கத்தின் உறுப்பினரான வழக்கறிஞர் ஷாருக் ஆலம், உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 'விபின் சங்கி' தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்றைய முன்தினம் 'மகாபஞ்சாயத்தை' தடை செய்ய ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இதற்கு முன்பு வழக்கறிஞர் ஷாருக் ஆலம் உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன்பு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்க மறுத்து, மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணைக்கு உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சங்கி ஒப்புதல் அளித்து, உயர் நீதிமன்ற பதிவேட்டில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு, தலைமை நீதிபதி விபின் சங்கி (Vipin Sanghi) மற்றும் நீதிபதி ராகேஷ் தப்லி (Rakesh Tabli) ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரனைக்கு வந்தது.

அப்போது, புரோலாவைச் சேர்ந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் துன்புறுத்தியதை அடுத்து, புரோலாவில் வகுப்புவாத பதற்றம் நிலவுவதாக ஷாருக் ஆலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், மகாபஞ்சாயத்தில் மத அமைப்புகளின் தலைவர்களால் வெறுக்கத்தக்க பேச்சு வெளியிடப்படும் என்றும், இது சூழ்நிலையை மோசமாக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளில் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இது போன்ற சூழ்நிலைகளைல் எந்த தொலைக்காட்சி விவாதங்களோ, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதோ கூடாது என்றும் உத்தரவிட்டனர். யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நபர்களை போலீசார் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, தனது ட்விட்டர் பதிவில், "உத்தரகாண்டில் முஸ்லீம்கள் திட்டமிட்ட சதித்திட்டத்தின் கீழ் குறி வைக்கப்படுகிறார்கள்.

பொய்களின் அடிப்படையில் முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடைமைகளை பறிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பாஜக மற்றும் சங்பரிவார் குழுவினர் ஆகியோர் இந்த சதியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்கம் சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற சொல்லாடல்களும், இன்னொரு பக்கம் பிரதமரின் மௌனம்.

இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தனித்து போராடுகிறார்கள் என்பதே உண்மை." என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரத்தாகும் பாஜக கொண்டுவந்த 'மதமாற்றத் தடை சட்டம்' - கர்நாடக அரசு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.