உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் பனிச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில், உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி கிராமத்தைச் சேர்ந்த 31 தொழிலாளர்கள் சிக்கி மாயமாகியுள்ளதாக அச்சம் கொள்ளப்படுகிறது.
தவுலிகங்கா ஆற்றின் அருகே அமைந்துள்ள நீர்மின் நிலையத்தில் லக்கிம்பூர் கேரி கிராமத்தைச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் வெஸ்டர்ன் கமாண்ட் கூடுதல் தலைமை இயக்குநர் மனோஜ் சிங் ராவத், சாமோலியில் தபோவன் சுரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்துவருகிறார்.
இதுவரை, 26 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 171 பேர் இந்த வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க...உத்தரகாண்ட் வெள்ளம்: தொடர் மீட்பு பணியில் ராணுவம்; உலகத் தலைவர்கள் உதவிக்கரம்