உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து ஏற்பட்ட பனிச்சரிவால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி, தபோவன் சுரங்கப் பாதையில் சிக்கிய 24-35 நபர்கள் உள்பட 206 பேர் மாயமாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தபோவன் சுரங்கப் பாதை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதையில் இருந்து சேறும், சகதியும் வெளியேறி வருவதால் மீட்பு பணிகள் தாமதமாவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:உத்தரகாண்ட் வெள்ளம்: தொலைந்துபோன அமெரிக்க அணு கருவி காரணமா?