ETV Bharat / bharat

சார்தாம் யாத்திரை: இதுவரை 57 பக்தர்கள் உயிரிழப்பு - சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் உயிரிழப்பு

உத்தராகண்ட் சார்தாம் யாத்திரையில் இதுவரை 57 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சார்தாம் யாத்திரை
சார்தாம் யாத்திரை
author img

By

Published : May 22, 2022, 8:13 PM IST

டேராடூன் (உத்தராகண்ட்): உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு புனித தலங்களுக்கு செல்லும் 'சார்தாம் யாத்திரை' கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை 57 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் ஷைலஜா பட் இன்று(மே 22) கூறுகையில், "மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பெரும்பாலான பக்தர்கள் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். தற்போது பயண வழிகளில் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் உடல் நலக்குறைவு கண்டறியப்பட்டால், மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து மே 6ஆம் தேதி கேதார்நாத் திறக்கப்பட்டது. பக்தர்களின் வருகைக்காக பத்ரிநாத் மே 8ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'சார்தாம் யாத்திரை' பக்தர்கள் கவலை: கேதார்நாத்தில் பனிப்பொழிவு, மழை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.